தற்போது நாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் அளவில் பெரியதாக இருக்கும் .இவற்றை மின்னஞ்சல் மூலமாக பிறருக்கு அனுப்புவதற்கோ அல்லது முகநூல் ,வலைபூக்களில் பகிர்வதற்கோ சிரமமாக இருக்கும் . இவற்றின் அளவை குறைப்பதன் மூலம் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் .படங்களை RESIZE செய்ய பல மென்பொருட்கள் உள்ளன . இந்த மென்பொருளில் உள்ள சிறப்பு ஒரு FOLDER ல் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தேவையான அளவில் RESIZE செய்து தேவையான இடத்தில் சேமிக்கலாம் .மேலும் ஒரு FOLDER ல் உள்ள படங்களின் பெயர்களையும் ஒரே கிளிக்கில் மாற்றலாம் . FastStone Photo Resizer என்ற இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்.அளவு மிக மிக குறைவு (1 MB ).பயன்படுத்துவதும் மிக எளிது. download link http://www.faststone.org/DN/FSResizerSetup32.exe