Skip to main content

Yahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை....!!!!

சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை.

அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.

அண்மையில் எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்களே இப்பதிவை எழுத வைத்தது. நடந்தது என்ன? IELTS கற்று கொண்டிருக்கும் இவருக்கு அண்மையில் தான் பரீட்சை நடந்து முடிந்தது. இவரின் Default Email ****@yahoo.com . இவரின் பரீட்சை திகதிகள் பற்றி மின்னஞ்சல் அனுப்ப பட்ட போது இவரால் மெயில் box இனை திறக்க முடியவில்லை. பின்பு தான் புரிந்தது இலங்கைக்கான அவர்களின் servers செயல் இழந்து விட்டது.

பின்பு ஒரு நாளின் பின்னர் தான் மீள இயங்க தொடங்கி இருக்கிறது. இன்னொரு நண்பருக்கும் அப்படி தான்… அவரின் iPhone 5 இல் இன்று வரை yahoo mail box இனை configure செய்ய முடியவில்லை. அதே போல எனக்கும் நடந்தது.. என் yahoo கணக்கு தானாகவே நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டது.

இன்றுவரை அவர்களுடன் தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்கவே இல்லை. நல்ல வேளையாக அதன் inbox backup ஒன்று இருந்ததால் அவற்றின் மூலம் பெரும்பாலான Email அனுப்புபவர்களை Gmail க்கு வரவைத்து விட்டேன். இவை எல்லாம் தொழில்நுட்ப பிழைகளே.. இவ்வாறு நடக்க என்ன காரணம்??

முன்பு கொடி கட்டி பறந்த Yahoo, Google இன் அபரிமிதமான வளர்ச்சியால் முடிங்கி விட்டது. என்றாலும் இயக்கிய படி தான் இருக்கிறது. இவர்களால் இவர்கள் மெயிலையே கட்டுபடுத்த முடியவில்லை. இது போதாது என்று ovi, nokia mail (இரண்டும் ஒன்று தான்) மெயில் சேவைகளையும் வாங்கி விட்டார்கள்.. Yahoo துரதிஷ்டவசமாக Email forwarding வசதியை இலவசமாக வழங்குவது இல்லை.

இது கிடைத்தால் நீங்கள் Yahoo mail க்கு வரும் மின்னஞ்சல்களை இலகுவாக வேறு சேவைக்கு திருப்பி விடலாம். நாளை உங்களுக்கும் இப்படி மெயில் காணாமல் அல்லது திறக்க முடியாமல் போகலாம். இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? முடிந்தவரை விரைவாக yahoo இனை விட்டு வெளியேற வேண்டும்.

நண்பர்களுக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள். இணைய சேவைகளுக்கு இவர்களின் மின்னஞ்சலின் அடியில் இருக்கும் Update subscription link மூலம் சென்று புதிய முகவரியை பதியுங்கள். இதற்கும் மேலாக yahoo க்கு வரும் Mails களை திரட்ட gmx.com இல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்.

அதன் மூலம் உங்கள் yahoo கணக்கு உயிருடன் இருக்கும் வரை அதற்கு வரும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக gmx.com இலும் சேமிக்க படும். இதை விட வேறு சில வழிகளும் இணையத்தில் உண்டு… உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு இலகுவான வழி மூலம் உங்கள் மின்னஞ்சல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.. பொதுவாக Gmail சிறந்த ஒன்று. Hotmail இல் சில விசேட சேவைகள் கிடைக்கிறது..

Popular posts from this blog

Digital Visual Interface (DVI)

EDIMAX BR‐6428nC

Default settings of the EDIMAX BR‐6428nC Here you find the default IP address as well as the username and password for the user interface of the EDIMAX BR‐6428nC N300 Multi-Function Wi-Fi router. This site also contains information about the preconfigured Wi-Fi settings of the device. In the bottom part of this website, you will find a manual for accessing the user interface of this router and resetting its factory settings .

Alto the first GUI computer

Xerox Alto The  Xerox Alto  is the first computer designed from its inception to support an  operating system  based on a  graphical user interface  (GUI), later using the  desktop metaphor . The first machines were introduced on 1 March 1973, a decade before mass market GUI machines arose.