கம்ப்யூட்டர் கிராஷ் -ஆவது எதனால்?
கம்ப்யூட்டர் கிராஷ் -ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும், அல்லது அப்படியே திரைக்காட்சி முடங்கிப் போய்விடும்.
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்சனை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வெரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்றுபோகும்.
இவ்வாறு ஏற்படுகையில் start -> settings -> control panel -> system -> Device manager எனச் சென்று பார்த்தால், பிரச்சனை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக்குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ-ஆர்-க்யூ என காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்சனை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்சனைக்குரிய சாதனத்தை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்பொம். ஆனால், ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாதபோது Fatel expection errorஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் Waitstate நிலையைச் சற்று உயர்த்தலாம், அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்களை கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்:
சில வேளைகளில் கிராஷ் ஆகும்போது Fatel OE expection and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனை தவிர்க்க வீடியோ டிஸ்பிளேமின் ரெசல்யூகளைக் குறைக்கவும், start settings control panel Display settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும், அதே போல் கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்:
பிரிண்டர்:
எனவே பல வேளைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாக காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்சனை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்கு செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்தி பின் மீண்டும் இயக்கவும்.
சாஃப்ட்வேர்:
ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேனில் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் ஏரர் (Kernal error) என்று ஒரு பிரச்சனை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனை காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டருந்தாலும் அதிக வெப்ப பிரச்சனை ஏற்படும். எனவே சிபியு விண் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
கம்ப்யூட்டருக்கு செல்லும் மின் ஒட்டத்தினை சீராகத் தரும் சாதனங்களை கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.